77 ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு தான்தோன்றி மலை மலர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சுதந்திர தின விழா நிகழ்ச்சி பள்ளி தாளாளர் பேங்க் சுப்ரமணியன் தலைமையில் நடைபெற்றது பள்ளி முதல்வர் ஜெயசித்ரா முன்னிலை வகித்தார் பள்ளி நிர்வாக அலுவலர் ஜே வித்யா அனைவரையும் வரவேற்றார் சிறப்பு விருந்தினராக தான்தோன்றிமலை எச்டிஎப்சி பேங்க் மேனேஜர் மூர்த்தி நடராஜன் அவர்கள் கலந்துகொண்டு தேசியக் கொடியை ஏற்றி வைத்து குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கினார் நிகழ்ச்சியில் நிர்வாக இயக்குனர்கள் சுப்பன் ஜெகதீஷ் மற்றும் விருந்தினர்கள் ஜிபிஎம் மனோகரன் வழக்கறிஞர் ரவீந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர் நிகழ்ச்சியில் மாறுவேட போட்டி நடன நிகழ்ச்சி சிலம்பாட்டம் மத நல்லிணக்க நிகழ்ச்சி பாட்டுப்போட்டி பேச்சுப்போட்டி அபிநய கூத்து முதலிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது ஒருங்கிணைப்பாளர் தர்மலிங்கம் கலந்து கொண்டு அனைவரையும் ஒருங்கிணைத்தார் இறுதியாக தமிழ் ஆசிரியர் அழகம்மாள் நன்றி உரையாற்ற நாட்டுப்பண்ணுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவு பெற்றது